மண்மூடிப் போகும் மாண்புகள்

      கதை, கட்டுரை, கவிதை, புதினம் பாடல், படம் எனும் பல்வேறு வடிவங்கள் மூலம் நற்சிந்தனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வீரியமிக்கக் கட்டுரைகளை நாம் நம் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு போய் சேர்க்கும் போதுதான் அதற்கான பலனும் தீர்வும் கிட்டும். அந்தவகையில், நல்ல சிந்தனைகளை மக்களிடம் விதைக்க, எழுத்தாளர் ப.திருமலை அவர்களின் கட்டுரைகள் துணை நிற்கின்றன.

     சமூக நலனில் அக்கறையுள்ளவர் என்கிற அடையாளத்தோடு மனதைப் பாதித்த பிரச்சனைகளை, அவலங்களை, சீரழிவுகளை கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்ல, அதற்கான தீர்வுக்காக அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், தனிமனிதன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, இந்தச் சமூகம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விரிவாய், தெளிவாய், புரியும் வகையில் எளிமையாய் எழுதியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை அவர்கள்

     இந்நூலில் சொல்லியிருக்கிற 26 தலைப்பிலான கட்டுரைகளும் சமூகச் சீர்கேடுகளைக் காரணத்தோடும், அதற்கான சட்டம், அதன் நன்மை, தீமை மற்றும் தீர்வு என அலசி ஆராய்ந்துள்ளன. இதைப் படிப்பதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. இதிலுள்ள செய்திகளையும் அதன் தீர்வுக்கான வழிமுறைகளையும் வெளியுலகுக்குப் பரவலாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பதில் நமது பங்கும் கடமையும் அடங்கியிருக்கிறது.

Description

விரைவில் மின்னூலாக