தமிழ்த்தொண்டர் வரலாறு (கவிதை நாடகங்கள்)

     தமிழ் தந்த வரலாற்றில் தனக்கென பேரிடம் பிடித்துக் கொள்ளும் அளவுக்குப் பெருந்திறம் கொண்டவர் கவிஞர் கு. சுயம்புலிங்கம்.

     ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே இலக்கிய இலக்கண வளங்கொழித்த நம் செந்தமிழ்த் தாய்மொழி பலராலும் தாக்குண்டு தடுக்கப்பட்டுப் பேரிடர்ப்பட்டுத் தேங்கிய வரலாறு கண்டு கொதிக்கின்றவர் இந்த நூல் படைக்கும் கவிஞர்.

     நூல் படைக்கும் ஒவ்வொருவரும் நூல் நிறைந்த கல்வி பெற்றவராய்த் திகழுதல் வேண்டும் என்பதே உண்மையான இலக்கியநெறி. இந்த நெறிக்குத் தன்னை இலக்கணமாக்கிக் கொண்டவர் நம் கவிஞர். இது உண்மைதான் என்பதை இந்தக் கவிதை நாடக நூலைப் படிப்பவர் எவரும் உணர்வர். ஆம்! தமிழுலகம் அறிய வேண்டிய அத்துணைச் செய்திகள் உள்ளன இந்த நூலில்.

     காலங்கள் தோறும் தமிழ் படைத்த ஏடுகள் ஆயிரம் ஆயிரம் போயின என்று, தான் வெந்து நின்றார் கவிஞர்.

     ஆடிப்பெருக்கில் நீரிலிட்டு அழிந்த ஏடுகள் பல்லாயிரம், நெருப்பிலிட்டுப் பொசுங்கிய ஏடுகள் பல்லாயிரம், ஈர வாய்க் கறையானால் இரக்கமின்றி அழிக்கப்பட்ட ஏடுகள் பல்லாயிரம், தமிழர்தம் இலக்கியச் சொத்து இப்படி அழிந்த நிலைதன்னைக் கவிஞர் காட்டக்கண்டு, கண்கலங்கி நிற்கின்றோம் நாம்.

     தமிழ்த் தொண்டென வந்தால் எவரிடமும் எள்ளளவும் சமரசம் செய்து கொள்ளாத தனித் தமிழ்த்திறனும் நேர்மையும் கொண்டவர் இந்தத் தமிழ்த்தொண்டர்.

– பேராசிரியர் முனைவர் செ. குமாரசுவாமி

Category: Tag:

Description

E-Book Link