Description
விரைவில் மின்னூலாக
எழுத்தாளர் தமிழுலகன் குமரி மாவட்டம் தந்த மூத்த படைப்பாளி. ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டவர். கற்பிக்கும் பணியோடு எழுதுவதிலும் தீராத ஆர்வம் கொண்டவர்.
தமிழர்களிடம் தமிழ் உணர்வு பொங்கி எழ வேண்டும் என்ற தீவிர ஆர்வம் கொண்டு படைப்புகளில் கைவண்ணம் காட்டும் நூலாசிரியர் – கதை, நாவல், கவிதை என சிறந்த புத்தகங்களை படைத்துள்ளார்.
புத்தகங்களை தேடி திரியும் எங்களுக்கு ‘காவிரி நாடன்’ என்ற வரலாற்று நாவல் மூலம் அறிமுகமானார் ஆசிரியர் இரா. பால் என்னும் தமிழுலகன்.
தமிழுலகன் அவர்களின் புத்தகங்களை சேகரிக்கும்போது இரு சிறு கவிதைப் புத்தகங்கள் (தமிழ் கனல், புத்துலகம்) கிடைத்தன. அவைகளையும், இன்னும் சில கவிதைகளையும் தொகுத்து ‘தமிழுலகன் கவிதைகள்’ என்னும் பெயரில் மின்னூலாக வெளியிடுகிறோம்.
தமிழ்கனல் 1966 -இல் வெளியான இந்நூல், கதைப்பாடல் தொகுப்பாக உள்ளது. இதற்கு பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
1967 -இல் சமதர்ம சமுதாயத்தைக் கருவாகக் கொண்டு புத்துலகம் என்னும் படைப்பையும் எழுதி, வெளியிட்டுள்ளார். இதற்கு பேராசிரியர் மா. இராசமாணிக்கனாரும், அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு. பக்தவத்சலம் அவர்களும், குமரி மாவட்டத் தமிழ்ப் புலவரவைத் தலைவர் வித்துவான் உயர்திரு. மா. தாமஸ் அவர்களும் முறையே மதிப்புரை, அணிந்துரை, வாழ்த்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர்.
இக்கவிதைகளைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம்.
தொடர்ச்சியாக பல நூல்களை வெளியிட்டு வருகிறோம்.
படியுங்கள், உங்கள் கருத்துகளை எங்களுக்குத் தெரிவியுங்கள்.
விபின் அலெக்ஸ்.
விரைவில் மின்னூலாக