தென்எல்லைக் காவலன் மார்ஷல் நேசமணி

     நஞ்சையும் புஞ்சையும் பூத்துக்குலுங்கும் இன்றைய குமரி மாவட்டம் அன்று துன்பங்களும், துயரங்களும் நிறைந்த பகுதியாகவே காணப்பட்டது. வயல் வெளிகளும் புன்னைமரக்காவும், இயற்கை எழிலும் நிறைந்துதான் அன்றைய திருவிதாங்கூர்.

     பெண்ணடிமை, தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு வரிகள், ஊழிய வேலை போன்றவை தென்திருவிதாங்கூரில் இருந்தது.

     அடிமைச் சந்தைகள் குமரி மாவட்டத்தில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். மன்னர் வாக்கே வேத வாக்காக இருந்தது என்பதை இப்புத்தக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

     எழில்மிகு தோற்றம் கண்ட இந்த திருவிதாங்கூரில் இவ்வளவு கொடுமைகள் என்று நினைக்கும் அளவிற்கு கொடுமைகள் அரங்கேறியுள்ளன.

     திருவிதாங்கூரில் மக்கள் போராட என்ன காரணம் என்பதை விளக்குகின்றார். திருவிதாங்கூர் மக்கள் நடத்திய போராட்டங்கள் பற்றி விளக்கமாக இந்தப் புத்தக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

     தோள்சீலைப் போராட்டம் ஏன் நடந்தது, அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதும் இப்புத்தகத்தில் விளக்கப்படுகிறது. திருவிதாங்கூரில் அன்றைய சூழ்நிலையில் ஏற்பட்ட பொருளாதார சீர்கேடுகள், அய்யா வைகுண்டரின் புரட்சி, சமத்துவ சமுதாய இயக்கத்தின் தோற்றம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

     பிடாகை ஒழிப்பு, உணவுக்கு வேலை, தலைவரி, வரிக்கொடுமை, கீழ்சாதி மக்களின் விடுதலை உணர்வு போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

     திருத்தமிழக போராட்டத்தில் பங்கேற்ற தமிழர் விடுதலை இயக்கங்கள் விரிவாகவும், விளக்கமாகவும் விவரிக்கப்பட்டுள்ளன.

     புதுக்கடை துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் விபரம் தரப்பட்டுள்ளன. கண்டால் அறியும் புள்ளி என்று உயர்சாதிக் காரர்களுக்குப் பிடிக்காதவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

     போராட்டக் களத்தில் தமிழ் மறவர்கள் போராடியதால் தான் இன்று நாம் தாய்த் தமிழகத்தோடு இணைந்தோம்.

     நேசமணியுடைய பிறப்பு, திவானோடு உள்ள தொடர்பு, எழுதிய புத்தகங்கள், எல்லைப் போரில் பங்கு, இயக்கப்பணி, கவிமணி வாழ்த்து, தலைவர்கள் புகழாரம் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நேசமணியின் சிறப்புப் பெயர்கள், நேசமணி செய்த சாதனைகள், தேவிகுளம் தினம் கொண்டாடப்பட்டது, சட்ட விதிமுறைகள் மீறாமல் நடத்திய போது, ஜவான்கள் அத்துமீறி நடந்து கொண்டனர்.

     மார்ஷல் நேசமணி மூணாறில் கைது செய்யப்பட்டார். நேசமணியின் வீரமுழக்கம் மக்கள் சக்தியாக உருவெடுத்தது. தாய் தமிழகம் அடைந்தே தீருவோம், தமிழை மறந்தவன், தாயை மறந்தவன், வீட்டுக்கொரு தமிழன் நாட்டைக் காக்க புறப்படுக என்பது உருக்கமான வரிகளாகும்.

     தமிழ்நாட்டோடு ஏன் 9 தாலுகாக்கள் இணையவில்லை. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எவ்வாறு உருவானது?

     பொருளாதார ஏற்ற தாழ்வு இல்லாமல், சாதி வேறுபாடு இல்லாமல் ஒரே நீதி இதுவே சமூக நீதி என்ற முறையில் நேசமணி பாடுபட்டார்.

     திருவிதாங்கூர் வாழ் தமிழர்களின் எண்ணிக்கை கி.பி. 1948 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எவ்வளவு என்ற புள்ளி விபரம் தெளிவாக இங்கே தரப்பட்டுள்ளன.

Description

E-Book Link