தென்றல் வீசும்

அனைவருக்கும் அன்பு வணக்கம்,

     எனது பயணத்தை எழுத்துத்துறையில் காலடி வைத்து பழகிய காலத்தில் எழுதிய கதை இது. என் எழுத்து முறையை எனக்கே அறிமுகப்படுத்திய கதை இது.

     தேடல்கள்தான் நம்மை நமக்கே அடையாளம் காட்டுகின்றது. அதன் இலக்கை நாம் அடைய களமிறங்கும் போதுதான் நம் தனித்துவம் வெளிப்படுகிறது. இதுவே என்னையும் ஒரு எழுத்தாளனாக மாற்றியது.

     காதலையும், வீரத்தையும் தமிழர்கள் இரு கண்களாகக் கருதினர். ‘காதல்’ என்னும் அழகிய நீரோடை நம் வாழ்வை அழகிய நந்தவனத்தில் கூட்டிச் செல்லும். நமக்குள் ரசிக்க வைக்கும். திருமண வாழ்க்கை இளமையோடுச் செல்ல ‘காதல்’ என்னும் ரசனை மிகமிக முக்கியம். இக்கதையிலும் காதலை மையப்படுத்தியே காட்சியமைத்துள்ளேன்.

என்றும் எழுத்துப்பணியில், விபின் அலெக்ஸ்

     இச்சிறுகதையை நடை – உரையாடல் வருணனை, கதைப்பொருள், கதை ஒருமை, கதையமைப்பு, குறிக்கோள் இவை அனைத்தையும் நெஞ்சைக் கவரும் வண்ணம் படைத்துச் சிறக்கிறார் ஆசிரியர்.

     ஆகத் ‘தென்றல் வீசும்’ கதை – மதன், சோபா, கீர்த்தி போன்ற உயிர்த்துடிப்புள்ள கதை மாந்தர்களைக் கொண்டு ஒளிர்வதனால் கதைமாந்தர் படைப்புச் சிறுகதையாகவும், ஒரு நல்ல கதைக்கோப்புக் கதையாகவும் – உணர்ச்சிப் பதிவுக் கதையாகவும் திகழ்கிறது எனலாம்.

கு. சுயம்புலிங்கம்.நிறுவுநர், தமிழ் நல மன்றம்

Category: Tags: ,

Description

E-Book Link

You may also like…