திருவள்ளுவர் பிறந்த இடம் மயிலாப்பூரா? திருநயினார்குறிச்சியா? குறத்தியறையா? – (கட்டுரைத் தொகுப்பு)

நூலாசிரியன் பேசுகிறேன்…..

     என்னினிய தமிழர்களே வணக்கம்.

     இஃது ஒரு தொகுப்பு நூல். உரைநடை நூல்.

     நிறுவுநராக என்னையே தலைவராகக் கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நல மன்றம் கடந்த 13 ஆண்டுகளில் தமிழுக்காக, தமிழினத்துக்காகப் பல போராட்டங்களை நடத்தியுள்ளது. தெருமுனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது.

     மொழி ஞாயிறு தேவநேயப் பாணவர், பாவேந்தர் பாரதிதாசன் காட்டிய வழியில் தமிழ் நலம் காக்க பயணித்து வருகிறது.

     சிலப்பதிகார ஆய்வரங்கம் – மணிமேகலை ஆய்வரங்கம் – களயரங்கம் என அரங்கப் பணிகளையும் –

     தமிழ்மொழிப் பாதுகாப்பு அரங்கங்களையும் கண்டுள்ளது.

     கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்து வருகிறது. நாற்பத்து நான்கு களப் போராட்டங்களை – தெருமுனைக் கூட்டங்களை – தமிழ் நலப் பரப்புரைகளை மேற்கொண்டு நடத்தியுள்ளது, நடத்தி வருகிறது.

     தமிழ் நல மன்ற அரங்குகளில் – களப் போராட்டங்களில் நான் ஆற்றிய சொற்பொழிவுகள் ஒன்பதின் தொகுப்பாகவும், உலக செம்மொழி மாநாட்டில் நான் ஆற்றிய ஆய்வுரையும் உள்ளடக்கியது இச்சிறுநூல்.

    இந்நூல் என்றுமுள தமிழுக்கானது, தமிழர்க்கானது,

     தமிழின எழுச்சிக்கானது.

     படியுங்கள்.

     தமிழின எழுச்சியைத் தூக்கிப் பிடியுங்கள்.

     தமிழ் வாழ்க!

     தமிழே துணை!

கு. சுயம்புலிங்கம்

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக