திருவிதாங்கூர் அடிமைகள்

      திருவிதாங்கூர் அடிமைகள் என்ற நூல் ஒன்று எழுத வேண்டும் என்பது என்னுடைய வெகுநாளைய ஆசை. அதை வெளியிட ஆவலைத் தூண்டியவர் சமுதாய நண்பன் இதழ் ஆசிரியரும், என்னுடைய நண்பருமாகிய திரு. P.S. ராஜ் அவர்கள். இயல்பான என் எண்ணத்திற்கு அவருடைய அன்புக் கட்டளையின் காரணமாக இதுவரை வெளிவராத இந்த நூலில் எழுத ஆரம்பித்தேன்.

     நூலுக்கு என்ன தலைப்பு கொடுப்பது என்று எண்ணிக்கொண்டிருக்கும் நேரத்தில் எனக்கு தீடீரென என்னுடைய நண்பர் கவிஞர் வேல்முருகப் பெருமாள் அவர்கள் திருவிதாங்கூர் அடிமைகள் என்று இதுவரை நூல் வெளிவரவில்லை. எனவே அந்தப் பெயரைக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அவர் கருத்தை ஏற்று அந்தத் தலைப்பைக் கொடுக்க எண்ணினேன்.

     திருவிதாங்கூர் மக்களின் நாகரிகம், பண்பாடு போன்றவை முன்னால் ‘முன்னுக்குப் பின் முரணான வரலாறுகளை’ பலர் படைத்துள்ளனர். அதையும் தெளிவுப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன்.

     நூல் உருவாக்கத்திற்குரிய தரவுகள் திருவிதாங்கூரில் எடுக்கப்பட்டவையாகும். மற்றும் பல தரவுகள் பல ஆய்வு நூற்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

     இன்றைய குமரி மாவட்டம் அன்றைய திருவிதாங்கூரின் ஒரு பகுதியாகும். இங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தோர்களுடைய முழுவிவரம் தரப்படவில்லை. இந்த நூலில் கள ஆய்வுப்படி அடிமைகளின் விடுதலைக்குப் பாடுபட்ட உண்மையான மொத்த இயக்கங்கள் தரப்பட்டுள்ளன.

     போராட்டத்திற்காகப் பாடுபட்ட எல்லா தலைவர்களுடைய வரலாறும் இதில் தரப்பட்டுள்ளன.

சா. குமரேசன்.

Description

E-Book Link