உறவுகள் (எண்ணங்களீன்ற கவிதைகள்)

ஒரே அறிவின உறவுகளே!

     நலமும் மகிழ்வும் நிலைக்க வாழ்த்துகிறேன்.

     ‘உறவுகள் (எண்ணகளீன்ற கவிதைகள்)’ என்ற இந்தநூல் எனது எழுத்தில் 7-வது கவிதைப் புத்தகம்.

     வி.பி.எக்ஸ். பதிப்பகம் வாயிலாக ‘சாரல் கவிதைகள்’ முதல் ‘உறவுகள் (எண்ணங்களீன்ற கவிதைகள்)’ வரை ஏழு கவிதைப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பதிப்பகத்தார் விபின் அலெக்ஸ் அவர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்! வாழ்த்துகளே!

     கிராமம் – ஏழ்மை – எளிமை – தொடர் துயரங்கள் – மாறுபடும் சமூக நிகழ்வுகள் – இயற்கை செயற்கை அழிவுகள் – தன்நலத்தார் தனநலத்தார் மக்களிடம் நடத்தும் அறிவீன இன்னல்கள் – இனமதப் பிரிவு பகைகள் – நாகரிக பேராசைகள் போன்ற பலவித ஏற்றத்தாழ்வோடு – அரசியல், ஆன்மிகம் – வியாபாரம் என்ற மும்மூர்த்திகளாய் காணும் காட்சி நடைமுறை நிகழ்வுகளின் சிறு பகுதிகளை ஏழு கவிதைப் புத்தகங்களில் வேதனையாய் எழுதியுள்ளேன்.

     இத்துடன் குழந்தைகளையும், இளையோரையும் எண்ணத்திலுயர்த்தி உயர்வுறப் பணிந்துள்ளேன்.

     எனது எழுத்துப் பணி விளம்பரமோ விற்பனையோ அல்ல. எல்லோரும் உண்மை உணர்ந்து நன்மையடைய வேண்டும்.

     முதியவன். முடியாத தள்ளாடும் தனிமை நிலையில் என் உயரினத்திற்கும், சந்ததிகளுக்கும் – நான் செய்யும் நல்லுள்ளத்துப் பணி – நான் எழுதிய புத்தகங்களே! எனது அனுபவ கருத்தமைந்த பலவிதப் புத்தகங்களையும் படித்தறிய விரும்புகிறேன்.

என்றும்,

உயரின உறவில்,

எம். ஏ. தேவதாசன்.

Category: Tag:

Description

E-Book Link