உரிமையும் உணர்வும்

     இன்றையச் சமூகத்தில் நடைபெறும் தீவிரவாதம், என்கவுண்டர், மரண தண்டனை, இன அழிப்பு, சித்திரவதை போன்ற கொடூரமான மனித உரிமை மீறல்களைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார் நூலாசிரியர். அதோடு பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய கட்டுரையில் இந்தச் சுதந்திர நாட்டில் அரசு எவ்வாறெல்லாம் பத்திரிகைக்கு நெருக்கடி கொடுக்கிறது; பத்திரிக்கை சுதந்திரத்தோடு இயங்க முடியாத கடுமையான சூழலில் பல பத்திரிகையாளர்கள் மற்றும் நூலாசிரியர்கள் தங்கள் உயிரைப்பணயம் வைக்க வேண்டியுள்ளது என்பதை “நமது மண்வாசம்’ இதழின் ஆசிரியர் திரு. திருமலை மிக அருமையாக வெளிக்கொணந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. நாற்பது ஆண்டுகால இதழியில் துறையில் அவரின் ஆழ்ந்த அனுபவத்தை அது உணர்த்துகிறது.

      இந்த குறுநூலில் நூலாசிரியர் இன்றைய நாகரீக உலகில் வாழும் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமையான மனித உரிமை குறித்தான பல்வேறு பரிமாணங்களை அது வெளிப்படும் சமூக, பொருளாதார, மத மற்றும் அரசியல் தளங்களிலிருந்து வெளிக்கொணர்ந்துள்ளார். அதுகுறித்த பரவலாக்கம், விழிப்புணர்வு, பொது சமூகத்தின் கடமையுணர்வு, அதற்கான அணிதிரட்டல், அணியமாதல், மாற்றத்திற்கான தலையீடு ஆகிய அனைத்து அம்சங்களையும் இக்குறுநூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

     கடந்த 40 ஆண்டுகள் இதழியல் துறையில் பணியாற்றும் நூலாசிரியர், அடிப்படையில் இதழிலியலார் என்றாலும் பன்முகம் ஆளுமையாக இருக்கின்றார் என்பது தெளிவாகிறது. நூலாசிரியர், தொகுப்பாசிரியர், மனித உரிமை செயற்பட்டாளர், களப்பணியாளர் என்ற பன்முகம் கொண்ட நூலாசிரியர் திரு. ப. திருமலை அவர்கள் மாணவர்கள், மனித உரிமை அமைப்புகள், இயக்கவாதிகள் போன்ற பல அடித்தள குழுக்களோடு தொடர்புள்ள ஓர் உயிர்த்துடிப்புள்ள சிந்தனையாளர். அந்த உயிர்த்துடிப்பிலிருந்து எழும் ஆதங்கமும் சமூகக் கடமை உணர்வும் ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகிறது.

Description

விரைவில் மின்னூலாக