வாழ்க்கையில் பயணிக்கும் சிறுகதைகள்

உறவுகளே வாழ்த்துக்கள்!

     ஏழ்மையும். வறுமையும் வாழ்க்கைச் சக்கரமாகக் கொண்டு பயணிக்கும் கிராமப்புற மக்களுடைய தொடர்பும், உறவும் எனக்கு அதிகம். அறிவதும், சிந்திப்பதும், எழுதுவதும் எனது விருப்பம். கண்ட, கேட்ட, படித்த நிகழ்வுகளும் அனுபவமே. அகவை எண்பத்திரண்டே.

     விருப்பம் எதுவாயினும் காலமும், பொருளும் தேவையே. அறிவுரைக்கும் ஆசிரியர் பணி. குறிப்பிட்ட பாடங்களை இதமாக இனிதாகச் கற்பிப்பது. மாறுபட்ட மாணவ மாணவிகள், நல்லனுபவம்.

     கருத்துரைக்கும் ஆர்வத்தில் மனதில் பட்டவைகளை அறிவுரையாக. கவிதைகளாக, கட்டுரையாக எழுதுவேன். எழுதியவைகளைப் பதிவிட வாய்ப்பும் வசதியும் இல்லாமலே பணி ஓய்வுக்குக் காலம் நெருங்கிய நிலையில் கதை எழுதும் நட்புத் தூண்டல் ஏற்பட்டது.

     எண்ணுவதும், எழுதுவதும்தான் பழக்கமாகிவிட்டதே! நிகழ்வுகளின் அனுபவங்கள் நினைவுகளில் உந்த ஆர்வத்தோடு அவசர அவசியமாக பன்னிரெண்டு சிறுகதைகளை ஒரே வாரத்தில் எழுதி மகிழ்ந்தேன்.

     அனுபவம் புதிதென்றாலும், கதைகளில் சிலபல உண்மைகள் மறைந்துள்ளன. தமிழினத்திற்குரிய வீரமும், காதலும் விலகி நின்றாலும், காதல் பயணம், சாதிசமய வெறியகற்றிச் சமூகத்தில் உயரின உறவு களிக்க, நிலைக்க ‘வாழ்க்கையில் பயணிக்கும் சிறுகதைகளாக’ நிறைவுற்றன.

     நானெழுதிய ‘நிலைக்கும் நன்மொழிகள்’, ‘சாரல் கவிதைகள்‘, ‘கருத்துப்பொட்டலம்‘, ‘நீ எந்தன் மனைவியானால்…..‘ என்னும் புத்தக வெளியீடுகளுடன், பதிவிலிருக்கும் பல நன்மையளிக்கும் கருத்துப் புத்தகங்களையும் நட்புக்கும், நல்லுறவுக்கும் உரிய வி.பி.எக்ஸ் பதிப்பகத்தின் வெளியீடு வாயிலாகப் படித்தறிந்து உறவளிக்க விரும்புகிறேன்.

வாழ்நாளில்

என்றும்

எம். ஏ. தேவதாசன்.

Description

E-Book Link