விடியும் நாள் வரைக்கும்

விடியும் நாளைத் தேடும் சின்னானூர் எனும் சிறு கிராமத்தைப் பற்றிய கதை இது. அவ்விடத்து மக்களின் வாழ்க்கை, வாழ்வியல் முறைகளோடு கதையின் பயணம் தொடர்கிறது. இது இளைஞர்களை மையமாக கொண்ட கதை. விவசாயத்தை முன்னிலைப் படுத்தி – விவசாயத்திற்கு தடையாக இருக்கும் சீமைக்கருவேல மரங்களை வேரறுக்க இளைஞர்கள் போடும் திட்டம் – தினக்கூலி தன் கூலித்தொகையில் ஒரு பகுதியை மதுவிற்காக செலவளிக்க, அதனால் அவன் குடும்பம் வளராமல் பின்தங்குவதை உணர்த்தியும் – புதுவகை குழந்தை  தொழிலாளர் திட்டத்தை முன்னிலைப்படுத்தும் வியாபாரி – அதனை மீறமுடியாமல், மீளத்தெரியாமல் இருக்கும் தீக்குச்சி அடுக்கும் தொழிலாளிகள் – வயதில் பெரியோர்கள் ‘இளைஞர்களுக்கு’ பக்கபலமாக இருப்பது – அரசின் சட்டங்களை மதிக்கும் கிராமத்தில், அதனை உதாசீனப்படுத்திய ஒரு குடும்பம்; அதனால் பட்டபலன் – கடைசியாக இளைஞர்களின் எழுச்சி! என இந்நாவல் நீளுகிறது.

இது ஒரு சிறுகிராமத்தின் கதையாக இருந்தாலும், கிட்டத்தட்ட ஒன்பது குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை முன்னிறுத்தியே கதை நகர்கிறது. அதிலும் முத்துச்சாமி – சாவித்ரி குடும்பத்தின் பங்கு மூன்று பரிமாணங்களாய் அமைகிறது.

இளைஞர்களின் பலம் என்ற ஒற்றைக்கருத்தில் கதையும் சுபமாய் முடிகிறது, விடியும் நாள் என்ற தேடலுக்காய்…….

 

Buy the E-Book in Amazon.in

Category: Tags: ,

Description

Buy the E-Book in Amazon.in