யாரோ ஒருத்தியின் கடிதம்

ஸ்வெய்க் எழுதிய எல்லாமே சூப்பர்தான். இருந்தும் என்னை மிகவும் கவர்ந்த புத்தககம் ‘The Letter From An Unknown Women’. ‘Edan & Cedar Paul’ தம்பதியினர் மொழி பெயர்த்தது. 1933 -ஆம் ஆண்டு லண்டன் புத்தக நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது.

     உள்ளம் கவர் கள்வன் ஒருவனிடம் ஏமாந்த சோனகிரி ஒருத்தியின் சோகக் கதை இது. எழுத்தாளன் என்ன தெய்வமா? தெய்வப் பிறவியா?  ஒரு கால் லிட்டர் பால் தேவைப்படுகிறது என்பதற்காக ஒரு பசு மாட்டையே வாங்கி வீட்டினுள் கட்டி வைத்துக் கொள்பவன் கடைந்தெடுத்த மடையன் என்ற எண்ணம் கொண்டவன் இக்கதையின் நாயகன். இந்த எழுத்துலக ஜாம்பவான் மீது தீராத காதல், மோகம் கொண்ட ஒரு பத்தாம் பசலை விசிறியின் கதை.

     ஸ்வெயக் சிக்மண்ட் ஃப்ராய்டின் சீடர். மனித மனத்தை படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவரான ஸ்வெய்க் இந்தப் புத்தகத்தில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் என்பது என் கணிப்பு. இதை நீங்களும் ஆமோதித்தால் அது என் மொழியாக்கத்திற்கு கிடைத்த வெற்றி.

 – ராஜ்ஜா

Category: Tag:

Description

E-Book Link