இரு மொழி எழுத்தாளர்.
தமிழில்: ராஜ்ஜா
ஆங்கிலத்தில்: P. Raja
நாற்பது ஆண்டுகள் புதுச்சேரி அரசு கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியராய் பணி செய்து பணி நிறைவு பெற்றவர்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் கதை, கவிதை, கட்டுரை, புத்தக விமர்சனம் எழுதும் இரு மொழி எழுத்தாளர்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் நூல்களை மொழியாக்கம் செய்பவர்.
புதுச்சேரி, காரைக்கால் வானொலி நிலையங்கள் இவரது படைப்புக்களை காற்றில் தொடர்ந்து மிதக்க விடுகின்றன.
ஆனந்த விகடன் வெளியிட்ட பிரிட்டானிகா தகவல் கலைக்களஞ்சியம் இவரது மொழியாக்கத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கி வந்தது.
புதுடில்லி சாகித்ய அகாதெமியில் பொதுக்குழு உறுப்பினராகவும், ஆங்கில செயற்குழு உறுப்பினராகவும் (2008-2012) பணி புரிந்தவர்.
நல்லி திசை எட்டும் குழுவினரால் நடத்தப்பட்ட TRANSFIRE ஆங்கில மொழியாக்கக் காலண்டிதழின் ஆசிரியராக (2011-2017) பணியாற்றியவர்.
பெங்களூரில் உள்ள சாகித்ய அகாதெமி மொழியாக்க மையத்தின் செயற்குழு (தமிழ்-ஆங்கிலம்) உறுப்பினராக செயல்படுபவர் (2018 – ).
பெற்ற விருதுகள்:
2001 — திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
2007 — நல்லி திசை எட்டும் விருது
2010 — சிறந்த எழுத்தாளர் விருது (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்)
2017 — வாழ்நாள் சாதனையாளர் விருது (கவிமுகில் அறக்கட்டளை, சென்னை)
2019 — உலக மாமேதை பெர்னார்டசா விருது (சங்கரதாஸ் சுவாமிகள் இயல் இசை நாடக சபா, புதுச்சேரி)
2019 — துப்புய் அடிகளார் விருது (இறையடியார் லூயிஸ் சவீனியன் துப்புயி வரலாற்று ஆணையம், புதுச்சேரி)
ராஜ்ஜாவின் தமிழ் நூல்கள்:
கட்டுரைகள்:
- கதகதயாம் காரணமாம் (ஆலயா, சென்னை) 2008
- படைப்பதனால் நானும்… (அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி) 2011
- கலீல் கிப்ரானின் காதல் கதை (ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை) 2014
- சாலையோரம் நிழல்தரும் மரங்கள் (இருவாட்சி, சென்னை) 2015
- புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும் (சந்தியா, சென்னை) 2016
- மனவாசல் தீபங்கள் (தாரிணி பதிப்பகம், சென்னை) 2019
சிறுகதைகள்:
நண்டு புடிக்கப் போய் (அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி) 2011
கவிதைகள்:
நினைவை விட்டு நீங்கா ஒருவனுக்காக (முற்றம், சென்னை) 2010
நாவல்:
- சாட்டை (சப்னா, கோவை) 2017
- எங்கள் தாத்தா வீட்டில் ஒரு தோட்டம் இருந்தது (தமிழினி, சென்னை) 2019
மொழிபெயர்ப்பு:
- கிரேக்க காதல் கவிதைகள் (மருதம் பதிப்பகம், ஒரத்தநாடு) – 2000
- சும்மா கிட (மருதம் பதிப்பகம், ஒரத்தநாடு) – 2000
- மர்மக் குல்லாய்: மனோஜ் தாஸ் கதைகள் (சாகித்ய அகாடமி, புதுடில்லி) 2001
- யாரோ ஒருத்தியின் கடிதம் (தமிழினி, சென்னை) 2001 (சப்னா, கோவை) 2017
- ஓடிப்போனவன் (நிவேதிதா புத்தகப் பூங்கா, சென்னை) 2005
- சரித்திரத்தில் இடம் பெறாத ஒரு ஆண்டில் (முற்றம், சென்னை) 2006
- ஓ தூரத்தில் இருப்பவரே (நிவேதிதா புத்தகப் பூங்கா, சென்னை) 2010
- நானே கடவுள் நானே மிருகம் (சாகித்ய அகாடமி, புதுடில்லி) 2012
Author’s Books
-
FOLKTALES OF PONDICHERRY
Read more -
யாரோ ஒருத்தியின் கடிதம்
Read more -
TO THE LONELY GREY HAIR
Read more -
WATER PLEASE
Read more -
K. D. SETHNA (Makers of Indian Literature)
Read more -
FOR YOUR EARS ONLY
Read more -
எங்க தாத்தா வீட்டில் ஒரு தோட்டம் இருந்தது
Read more -
நானே கடவுள் நானே மிருகம்
Read more -
A CONCISE HISTORY OF PONDICHERRY
Read more -
சாலையோரம் நிழல் தரும் மரங்கள்
Read more -
மனவாசல் தீபங்கள்
Read more -
சாட்டை
Read more